உலகம்

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

(UTV |  சீனா) – சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 3 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆகப் பதிவாகியது. இதன் ஆழம் 10 கிலோ மீட்டர் ஆழம் இருக்கும். இந்த நிலநடுக்கத்தினால் இதுவரை மூன்று பேர் பலியாகி உள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாகப் பல வீடுகள் சரிந்துள்ளதாக மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் மலைப் பகுதிகளான மேற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகள் தொடர்ந்து நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

2008ஆம் ஆண்டு சிச்சுவான் மாகாணத்தில் 7.9 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 87,000 பேர் பலியாகினர் என்பது நினைவுகூறத்தக்கது.

Related posts

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவ இந்தியா தயார்

பாலியல் வழக்கில் சிக்கிய தனுஷ்கவுக்கு எதிரான பிணை தளர்வு!

ராக்கை சேர்ந்த டிக்-டாக் பிரபலம் இசைக்கு நடனமாடும் வீடியோக்களால் சுட்டுக்கொலை