உலகம்

மீண்டும் ஏவுகணை சோதனையில் இறங்கிய வடகொரியா

(UTV |  தென்கொரியா) – வடகொரியா இரண்டு ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளதாக தென்கொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்கொரிய ராணுவம் தரப்பில், “வடகொரியா புதன் கிழமையன்று கிழக்கு கடற்பகுதியில் இரண்டு ஏவுகணை சோதனைகளை நடத்தியது. ஒரே வாரத்தில் இரண்டு முறை ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை சோதனை குறித்து அமெரிக்காவும், தென்கொரியாவும் ஆய்வு செய்து வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏவுகணை சோதனை நடத்தி அண்டை நாடுகளுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏவுகணை சோதனை காரணமாகவே அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் மோதல் நிலவியது.

கரோனா அச்சத்தால் வடகொரியா தொடர்ந்து எல்லைகளை மூடிவைத்துள்ளது. அணு ஆயுத சோதனைகளால் பல்வேறு நாடுகளிடமிருந்தும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ளது வடகொரியா. பொருளாதாரத் தடைகள் காரணமாக வடகொரியா உணவுப் பஞ்சத்தையும் எதிர் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் கரோனாவால் பல்வேறு நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகும்போது வடகொரியாவில் மட்டும் கரோனா தொற்று குறித்த எந்தத் தகவலும் வெளியிடப்படாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆஸியில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் தளர்வு

மீண்டும் இன்று காலை ஜப்பானில் நிலநடுக்கம்..!

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் உள்நுழைய தடை