(UTV | கொழும்பு) – பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு என்பனவற்றினால் அறிவிக்கப்பட வேண்டிய தொழிநுட்ப அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களின் தயாரிப்பு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொவிட்-19 பரவல் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் கோரிக்கைக்கு அமைய பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான தொழிநுட்ப குழுவின் அறிக்கை எதிர்வரும் 17ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வழிகாட்டல்களை தயாரிக்கும் குழுவின் தலைவராக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர்.