விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: 15 வீரர்கள் கொண்ட பங்களாதேஷ் அணி அறிவிப்பு

(UTV | பங்களாதேஷ்) –  ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒக்டோபர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் பங்களாதேஷ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒக்டோபர் 17-ம் திகதி முதல் நவம்பர் 14-ம் திகதி வரை நடைபெற உள்ளன. இந்தத் தொடருக்கான அணிகளை ஒவ்வொரு அணியும் அறிவித்து வருகின்றன.

பங்களாதேஷ் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துக்கு எதிராக டி20 தொடரை வென்றது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் அடிப்படையில் 15 வீரர்களைக் கொண்ட அணியை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

பங்களாதேஷ் அணி விவரம்:

மெஹ்மத்துல்லா (கெப்டன்), சஹிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹ்மான், சவுமியா சர்க்கார், லிட்டர் குமார் தாஸ், ஆபிப் ஹுசேன், முகமது நமிம், நுருல் ஹசன் சோஹன், சமிம் ஹுசேன், முஸ்தபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது, முகமது சயிப்புதீன், சோரிபுல் இஸ்லாம், மெஹதி ஹசன், நசும் அகமது.

காத்திருப்பு வீரர்கள்: ரூபல் ஹுசைன், அமினுல் இஸ்லாம்.

Related posts

கொரோனாவுக்காக அரைமாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கியது பங்களாதேஷ் கிரிக்கெட் அணி

நாணய சுழற்சியின் பங்களாதேஷ் அணிக்கு வெற்றி

உலகின் சிறந்த பந்துவீச்சாளராக பும்ரா