உள்நாடு

ஜனாதிபதி ஐ.நா பொதுச்சபையின் 76வது கூட்டத்தொடரில்

(UTV | கொழும்பு) –   எதிர்வரும் 21 ஆம் இல் நிவ்யோர்க்கில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76வது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்கேற்க உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுச் சபை கூட்டத்தொடரில் உரை நிகழ்த்துவதும் நாட்டில் இருந்து வெளியேறி கூட்டத்தொடர் ஒன்றில் பங்கேற்பதும் இதுவே முதற்தடவையாகும்.

இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி, துறைசார் ராஜதந்திரிகளை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமது தனிப்பட்ட கொள்கை மற்றும் நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு குறைந்தளவிலான தரப்பினருடன் இந்த விஜயத்தை முன்னெடுக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவைகளே முன்னெடுப்பு

வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை [VIDEO]

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி மீண்டும் விளக்கமறியலில்