உள்நாடு

களுத்துறை மாவட்டத்திற்கு நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – களுத்துறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்று காலை 8.00 மணி முதல் 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்தச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, வாத்துவை, வஸ்கடுவ, பொதுபிடிய, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, கடுகுருந்த, நாகொடை, பென்தொட, பயாகல, போம்புவல, அலுத்கம, தர்கா நகர், பிலமினாவத்த, களுவாமோதர மற்றும் மொரகல்ல ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

ரணிலை தொலைபேசியில் கடும் தொனியில் எச்சரித்த மகிந்த!

உருக்குலைந்த நிலையில் 2 சடலங்கள் மீட்பு

மேலும் 16 பேர் பூரண குணம்