உள்நாடு

இம்மாதம் முதல் ஆசிரியர்களுக்கு ரூ.5,000 இடைக்கால கொடுப்பனவு

(UTV | கொழும்பு) – ஆசிரியர்களுக்கான 5,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு இம்மாத சம்பளத்துடன் கிடைக்கப்பெறும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்தினால் ஆசிரியர் அதிபர்களின் வேதன முரண்பாட்டினை முழுமையாக தீர்ப்பத்தில் சிக்கல் உள்ளது.

இதனால் அடுத்த பாதீட்டின் மூலம் அவர்களது வேதன முரண்பாட்டினை கட்டம் கட்டமாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ரமேஸ் பத்திரன மேலும் தெரிவித்தார்.

Related posts

வரவு – செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம்

மேலும் இரு தினங்களுக்கு மழையுடனான வானிலை

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்