(UTV | கொழும்பு) – சீனிக்கான அதிகூடிய சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.
இதற்கமைய, ஒரு கிலோ பொதிசெய்யப்பட்ட சீனியை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச சில்லறை விலையாக 125 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொதிசெய்யப்படாத ஒரு கிலோ சீனி விலை 122 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஒரு கிலோ பொதிசெய்யப்பட்ட சிவப்பு சீனியின் விலை 128 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதிசெய்யப்படாத ஒரு கிலோ சிவப்பு சீனியின் விலை 125 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அரிசிக்கான அதிகூடிய சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியாகியுள்ளது.
இதன்படி, கீரி சம்பா கிலோ ஒன்றின் விலை 125 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெள்ளை அல்லது சிவப்பு சம்பா அரிசி கிலோ ஒன்றின் விற்பனை விலை 103 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சிவப்பு நாடு கிலோ ஒன்றின் அதிகூடிய சில்லறை விலை 98 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பச்சை அரிசி கிலோ ஒன்றின் அதிகூடிய விலை 95 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.