உள்நாடுவணிகம்

சீனியின் தாக்கம் : கேக் கிலோவின் விலை 150 ரூபாவால் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – ஒரு கிலோ சீனியின் விலை 200 ரூபாவை கடந்துள்ள நிலையில், தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, எதிர்வரும் நாட்களில் சீனியின் விலை மேலும் உயரக்கூடும் எனவும், இதனால் கேக் ஒரு கிலோவின் விலையை 150 ரூபாவால் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சீனி, பால்மா, முட்டை, உருளை கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான விலைகள் அதிகரித்துள்ளமை, தற்போது பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பதிவு செய்யப்படாத சானிடைசர் விற்பனைக்கு தடை

நாளை முதல் பால் மாவின் விலை குறைக்கப்படும்!

விவசாயிகளுக்கு அரசாங்கம் விடுத்த மகிழ்ச்சி தகவல்!