உள்நாடு

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

(UTV | கொழும்பு) – மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று(28) 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அனுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும் திருகோணம​லை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 40 -50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா : 8,000ஐ கடந்தது

‘சதொச’வினால் அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்கும் விசேட வேலைத்திட்டம்

நாட்டு பற்றுள்ளோர் ரணில், சஜித், அனுரவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் – பொதுஜன பெரமுன எம்.பி திஸ்ஸ குட்டியராச்சி 

editor