வகைப்படுத்தப்படாத

“மங்களவின் இழப்பு ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு” – ACMC

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இழப்பு ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட இழப்பாகுமென முன்னாள் ராஜாங்க அமைச்சரும் அகில மக்கள் காங்கிரசின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மரணச் செய்தி மிகவும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்த சிறுபான்மை சமூகங்களின் குரலாக ஒலித்த பெரும்பான்மை சமூகத்தின் தலைவராக மங்கள சமரவீர காணப்பட்டார்.

மங்கள சமரவீர சிறுபான்மை மக்களை நேசித்ததுடன் சிறுபான்மை சமூகங்களும் மங்கள சமரவீரவின் மீது அன்பும் மிகவும் மரியாதையும் வைத்திருந்துடன் தமக்கான குரலாகவும் நம்பியிருந்தனர்.

எப்போதும் துணிந்து ஜன நாயகத்துக்காக குரல் கொடுத்த ஒரு பெருந்தலைவனாக மங்கள சமரவீரவை பாரக்கின்றோம். ஜனநாயக வாதியாக திகழ்ந்த மங்கள உள் நாட்டு வெளிநாட்டு தலைவர்களுடனும் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தார்.

இனம் மதம் மொழி இவைகளுக்கு அப்பால் அனைவரும் ஒன்றே என்ற வாதத்தை முன் வைத்து தனது மரணம் வரை அதற்காக குரல் கொடுத்தவர். அவர் அமைச்சராக இருந்த கால கட்டங்களில் அனைத்து சமூகங்களுக்கும் தேவையான வற்றை அவரது அமைச்சினூடாக வழங்குவதில் பெரும் கரிசனையும் காட்டினார்.

தனக்கென சொத்துக்கள் எதையும் சேமிக்காத ஒரு ஊழல் இல்லாத ஒரு தலைவனாக மங்கள சமரவீர திகழ்ந்தார். அவர் சுகவீனம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென அனைவரும் பிராத்தனை செய்தார்கள். ஆனால் இறைவனின் நாட்டம் அவர் மரணித்து விட்டார். அவரின் இழப்பு ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பாகும்.

சமூக இன நல்லிணக்கத்தின் காவலனாக மங்கள சமரவீர திகழ்ந்தார்.
அவரின் இழப்பால் துயருறும் அவரின் குடும்பத்தினர் உட்பட அனைவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். மனிதம் நிறைந்த மனிதர்கள் மரணிக்கும் போது இதயம் கணக்கிறது என்றும் அதில் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் மர்ம கும்பலால் நபரொருவர் மீது கொடூரத் தாக்குதல்

துறைமுக ஊழியர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

විසඳුම් නොලැබුණොත් තැපැල් වෘත්තිය සමිති අඛණ්ඩ වර්ජනයක