உள்நாடு

வருமானத்தை இழந்துள்ள பேரூந்து ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம்

(UTV | கொழும்பு) – வருமானத்தை இழந்துள்ள பேரூந்து உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கு தேவையான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

வாகன உதிரிப்பாகங்கள், பேட்டரிகள், டயர்கள், எண்ணெய் வகைகள் மற்றும் காப்புறுதி, லீசிங் கட்டணங்களுக்கான ஒரு தொகை பணத்திற்குரிய வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

இதனை தவிர, வருமானம் இழந்துள்ள பேரூந்து ஊழியர்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்குரிய பணத்திற்கான வவுச்சர்களும் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நிவாரண செயற்றிட்டம் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts

அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கொவிட்

சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சையில் முஸ்லிம் மாணவிகளுக்கு அநீதி: களமிறங்கிய முஸ்லிம் சட்டத்தரணிகள்

Update – நீரில் மூழ்கி உழவு இயந்திரம் விபத்து – நான்காவது ஜனாஸாவும் மீட்பு – தேடும் பணி நிறுத்தம்.

editor