(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் தினமும், இரவு 10 மணி தொடக்கம், அதிகாலை 4 மணிவரை, இன்று (16) முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த இந்தக் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், நேற்று (15) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், பொதுமக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாளை (17) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல்வரை, வீடுகளிலும், மண்டபங்களிலும், திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், உணவகங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் அதன் கொள்ளளவில், 50 சதவீதமானோருக்கு இடமளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.