உள்நாடு

Sinopharm தடுப்பூசியை விற்பனை செய்த சிற்றூழியர் கைது

(UTV | கொழும்பு) – Sinopharm தடுப்பூசியை 2000 ரூபாவிற்கு விற்பனை செய்த லுனாவ வைத்தியசாலையின் சிற்றூழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சின் விசாரணை பிரிவினரும் கல்கிசை பிராந்திய புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

50 வயதான சிற்றூழியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சிற்றூழியர் மொரட்டுவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை மொரட்டுவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Related posts

இன்று மேலும் 414 பேருக்கு கொரோனா உறுதி

குரங்குகளுக்கு கருத்தடை!

இன உறவைக் கட்டியெழுப்பியதனால் சகல சமூகங்களுக்கும் அரசியல் அந்தஸ்து