உள்நாடு

சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான வயதெல்லை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான வயதெல்லையினை 17 இல் இருந்து 18 ஆக அதிகரிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த அதிகார சபையின் தலைவர் முதித்த விதானபத்திரன கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

17 வயதிற்கு உட்பட்டவர்கள் சிறுவர்களாகவே கருதப்படுகின்றனர்.

அவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் சிக்கல் நிலை உள்ளது.

எனவே இந்த காரணிகளை கருத்திற்கு சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான வயதெல்லையினை 18 ஆக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் முதித்த விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

Related posts

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அழைப்பாணை

பழைய பாராளுமன்றத்தை பார்வையிட சந்தர்ப்பம் [VIDEO]

பொலன்னறுவை மாவட்டத்தில் முடக்கப்பட்ட அபயபுர கிராமம் விடுவிப்பு