உள்நாடு

கல்கிசை சிறுமி விவகாரம் : 4 இணையத்தளங்களுக்கு தடை

(UTV | கொழும்பு) – கல்கிசை பிரதேசத்தில் 15 வயதான சிறுமியொருவரை விற்பனைக்காக விளம்பரப்படுத்திய 4 இணையத்தளங்களுக்கு தடை விதிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம், தேசிய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேற்படி இணையத்தளங்களுக்கு தடைவிதிக்குமாறு, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது போன்ற இணையத்தளங்களுக்கு தகவல்களை பதிவேற்றுதல் மற்றும் பரிமாற்றுதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

Related posts

இலங்கையில் 11 இலட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் [VIDEO]

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

‘ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கும் திட்டம் இல்லை’ – SLPP