(UTV | கொழும்பு) – வெளிநாட்டு பணியாளர்களுக்காக, விமான நிலைய வளாகத்தில் எழுமாறாக கொவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் அடுத்தவாரம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பி, மீளவும் வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்ல உள்ளவர்களுக்கு ஏற்பட்டுள்ள தடையை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.