உள்நாடு

இன்று முதல் மூன்று நாட்களுக்கு 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் இன்று(11) ஆரம்பிக்கப்படுகின்றது.

அதற்கமைய, குறித்த செயற்றிட்டத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.

மேல் மாகாணத்தில் இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கும் மேற்பட்டோரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படும் நாள், இடம் மற்றும் நேரம் ஆகியன கையடக்கத்தொலைபேசிக்கு குறுந்தகவல் (SMS) ஊடாக அறிவிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

   

Related posts

கோள் மண்டல காட்சி கூடம் செவ்வாயன்று திறப்பு

முதலாம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு

முகக்கவசம் அணியாத 1,060 பேரிடம் கொரோனா பரிசோதனை