உள்நாடு

´MV Xpress pearl´ குறித்து அரசு கவனம்

(UTV | கொழும்பு) – ´எக்ஸ்பிரஸ் பேர்ள்´ கப்பலில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்தக் கப்பலினால் ஏற்பட்ட தாக்கங்கள் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பான இழப்பீடுகளைப் பெற்றுக் கொள்ள, அது பற்றி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றங்களைக் கண்டறிதல் போன்ற விடயங்கள் பற்றி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் நேற்று (02) ஆராயப்பட்டது.

சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகார சபை, ´நாரா´ நிறுவனம், கடற்படை உட்பட துறைசார் தரப்புகளின் ஆலோசனைகளும் இதன் போது வழங்கப்பட்டன. சேதமடைந்துள்ள கடல் பகுதியைச் சுத்தப்படுத்துவதற்கு கடற்றொழிலாளர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வது பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

   

Related posts

அரசாங்க அச்சக திணைக்களத்துக்கு விசேட பாதுகாப்பு

தனியார் தாங்கி உரிமையாளர்களது பணிப்புறக்கணிப்பிற்கு IOC ஆதரவு

சில பால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க திட்டம்