உள்நாடு

நாளை 24 மணிநேர நீர்வெட்டு

(UTV | கொழும்பு) – வத்தளைப் பகுதியில் நாளை (03) காலை 10 மணி தொடக்கம் 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாளை (03) காலை 10 மணி தொடக்கம் நாளை மறுதினம் (04) காலை 10 மணி வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஹெந்தலை பாலம் வழியாக நீர்க்குழாய் இணைப்புப் பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, வத்தளை, நீர்கொழும்பு வீதியில் சில பகுதிகள், மாபொலவில் ஒரு பகுதி, வெலிகடமுல்ல, ஹெந்தலை வீதி நாயக்கந்த சந்தி வரையிலான அனைத்து கிளை வீதிகள், எல்விஸ் ஒழுங்கை, மருதானை வீதி, புவக்வத்த வீதி, கலகஹதுவ, கெரவலபிட்டியவில் சில பகுதிகளில் நீர் விநியோக நடவடிக்கைகள் தடைப்படவுள்ளன.

Related posts

ஊரடங்கு உத்தரவு தொடர்பான அறிவித்தல்

இன்று நண்பகல் 12.00 மணி ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

editor

அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூலம் – குழு நியமனம்