உள்நாடு

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் இணைய வழியில்

(UTV | கொழும்பு) – பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுச் சான்றிதழ்களை இணைய வழியில் பெற்றுக்கொள்ளக் கூடிய சேவையொன்று நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.

தலைமை பதிவாளர் திணைக்களத்தினால் இது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அலைபேசிகள் மற்றும் கணனி வழியாக பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுச் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள விண்ணப்பம் செய்ய முடியும்.

வீசா அல்லது மாஸ்டர் கார்ட்களை பயன்படுத்தி இதற்கான கட்டணங்களை செலுத்த முடியும். ஸ்பீட் போஸ்ட் அல்லது விரைவுத் தபாலிலோ அல்லது மிக அருகாமையில் இருக்கும் பிரதேச செயலகத்திலோ சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://online.ebmd.rgd.gov.lk என்ற இணைய தளத்திற்குள் பிரவேசித்து சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கையை சமர்ப்பிக்க முடியும் என்பதுடன் www.rgd.gov.lk என்ற இணைய தளத்திலும் 011 2889518 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலமும் இது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் தலைமை பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

   

Related posts

எடுத்த கடனை கொடுக்க முடியாமல் தாயும் குழந்தைகளும் விஷமருந்தியுள்ளனர்

பல்வேறு மாவட்டங்களில் 16 கொரோனா நோயாளர்கள் அடையாளம்

டீசல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தும் பணிகள் நிறைவு