உள்நாடு

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தினுள் 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் ´கொவிட் தடுப்பூசி´

(UTV | கொழும்பு) – 12 வயதுக்கும் 18 வயதிற்கும் உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ´கொவிட் தடுப்பூசி´ ஏற்றுவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக கொவிட் தடுப்பூசி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் தலைவர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்;

“.. இது சம்பந்தமான முதல் கட்டப் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது. ´பைஸர்´ அல்லது ´மொடர்னா´ தடுப்பூசியை இந்த வயதுப் பிரிவு மாணவர்களுக்குச் செலுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பரிந்துரை கிடைத்தபின் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்..”

இதேவளை, 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ம் திகதிக்கு முன்னர் தடுப்பூசி ஏற்றுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் சிபார்சு கிடைத்தவுடன் 18 வயதிலிருந்து 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.

கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

Related posts

ஜூன் மாதத்திற்கான 5,000 ரூபா கொடுப்பனவை வழங்காதிருக்க தீர்மானம்

வெடிபொருட்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது

கொரோனாவினால் இதுவரை 211 பேர் பலி