கேளிக்கை

ஆப்கானின் பிரபல நகைச்சுவை நடிகர் கொலை

(UTV |  ஆப்கான்) – ஆப்கானின் பிரபல நகைச்சுவை நடிகர் என்று அறியப்படும் நசார் முகமத், தலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து ஆப்கான் ஊடகங்கள் தரப்பில், “நசார் முகமத் சில நாட்களுக்கு முன்னர் அவரது வீட்டுக்கு அருகில் துப்பாக்கி ஏந்திய நபரால் கடத்தப்பட்டார். இந்த நிலையில் அவர் கொல்லப்பட்டார். அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தலிபான்கள்தான் அவரைக் கடத்தி, கொலை செய்துள்ளதாக நசார் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். கொல்லப்பட்ட நசார், கந்தஹார் ஆப்கான் பொலிஸ் படையில் இதற்கு முன்னர் பணிபுரிந்தவர்” என்று செய்தி வெளியானது.

இந்த நிலையில் நசார் கடத்தப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோவை தலிபான்கள் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ ஆப்கான் மக்களிடத்தில் தலிபான்கள் குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஆப்கான் எல்லையில் 90% பகுதிகளைத் தாங்கள் கைப்பற்றியுள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

மே மாதத்திலிருந்து ஆப்கானில் கொல்லப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

      

Related posts

திரைப்படமாகும் தாய்லாந்து குகைச் சம்பவம்

ஹன்சிகா படத்திற்காக இடைவிடாமல் உழைக்கும் சிம்பு?

நயன்தாரா படத்துக்கு யுவன் இசையமைக்கமாட்டாரா?