உள்நாடு

பீரிஸ் உடன் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – இணையவழி கற்பித்தலை புறக்கணித்துள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களது வேதனப்பிரச்சினைக்கு கல்வி அமைச்சினால் இன்று தீர்வு வழங்கப்படும் என்று நம்புவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களது தொழிற்சங்கங்கள் இன்று கல்வி அமைச்சருடன் முக்கிய சந்திப்பில் ஈடுபடவுள்ளன.

இதன்போது தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படாவிட்டால், தற்போது மேற்கொண்டு வருகின்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று அந்த சங்கங்கள் எச்சரித்துள்ளன.

இதுதொடர்பாக நேற்றைய தினம் அந்த சங்கங்கள் கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளருடன் சந்திப்பை நடத்தி இருந்த நிலையில், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களது சம்பளப் பிரச்சினைக்கு இன்றைய சந்திப்பின் ஊடாக தீர்வு வழங்கப்படும் எனத் தாம் நம்புவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

   

Related posts

திங்கள் முதல் அதிவேக ரயில் சேவைகள்

ஹெக்கிரிய பகுதியில் சிறியளவான நிலஅதிர்வு பதிவு

மின்துண்டிப்பு அமுல் குறித்து இன்று தீர்மானம்