உள்நாடு

கல்வியமைச்சரை சந்திக்கவுள்ள ஆசிரியர் தொழிற்சங்கங்கள்

(UTV | கொழும்பு) – இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகியுள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ்க்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை(20) இடம்பெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

இந்த சந்திப்பில், தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லையெனில், எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பள கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் முன்னெடுத்துவரும் இணையவழி கற்பித்தல் புறக்கணிப்பு இன்று 8வது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

   

Related posts

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க 120 எம்.பி.க்கள் தயார்

கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு [UPDATE]

அம்பாறையை அச்சப்படுத்திய சம்பவம் ; ஒருவரின் நிலை கவலைக்கிடம்