உள்நாடு

கொவெக்ஸ் வேலைத்திட்டத்தின் கீழ் 15 இலட்சம் மொடர்னா தடுப்பூசிகள் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) –  அமெரிக்காவின் அன்பளிப்பாக கொவெக்ஸ் வேலைத்திட்டத்தின் கீழ் 15 இலட்சம் மொடர்னா தடுப்பூசிகள் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகளை சீனா நன்கொடையாக வழங்கவுள்ளது.

கொழும்பில் உள்ள சீன தூதரகம் தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் நேற்று இதனைத் தெரிவித்தது.

இதற்கமைய, குறித்த சைனோபார்ம் தடுப்பூசிகளை எதிர்வரும் வாரங்களில் சீனா இலங்கைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனா பிரச்சினைகளில் இருந்தப்போது இலங்கை வழங்கிய உதவிகளை எப்போது நினைத்துப் பார்ப்பதாக சீனத்தூதரகம் தமது ட்விட்டர் பதவில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஓகஸ்ட் 1ம் திகதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ்

உலகம் முழுவதும் Microsoft Teams சேவைகள் செயலிழப்பு

இலங்கையில் 20 வது கொரோனா மரணம் பதிவானது