உள்நாடு

ஹரின் பெர்னாண்டோ தொடர்பில் சட்டமா அதிபர் வெளியிட்ட அறிவிப்பு

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி, அவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, செப்டெம்பர் 1ஆம் திகதி வரையிலும் ஹரின் பெர்ணான்டோ கைது செய்யப்படமாட்டார் என உயர்நீதிமன்றத்துக்கு சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

தான் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

2019 இல் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக வாக்குமூலம் பதிவு செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைத் தருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், தான் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.

   

Related posts

பொதுமக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் – FUTA

தேசபந்துவுக்கு எதிரான மனு மீதான விசாரணை திகதி அறிவிப்பு

editor

2024 ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நிறைவு!

editor