உள்நாடு

ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது

(UTV | கொழும்பு) – அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணையவழி கற்பித்தலில் செயற்பாடுகளில் இருந்து விலகி, முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் (14) தொடர்கின்றது.

தமது கோரிக்கைக்கு கல்வி அமைச்சினால் இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் நேற்று முன்தினம் (12) காலை 6 மணி முதல் இணையத்தள கல்வி நடவடிக்கைகளிலிருந்து விலகியுள்ளனர்.

குறித்த சங்கத்தின் சில உறுப்பினர்களுக்கு நீதிமன்றத்தால், பிணை வழங்கப்பட்ட போதிலும் தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

தமது சம்பள வேறுபாட்டிற்கான தீர்வு காணப்படுவதுடன், அதற்கான பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள தாம் தயாராகவுள்ளதாக எனினும், பேச்சுவார்த்தைக்கு அவகாசம் வழங்காது அரசாங்கம் தொடர்ந்தும் இதனை பிற்போடுமானால் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்க நேரிடுமென இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இணையவழி கல்வி செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கொரோனா வைரஸ் தொடர்பான விசேட கூட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து நால்வர் நீக்கம்

இம்முறை O/L பரீட்சைக்கு அமரும்போது முகக்கவசம் கட்டாயமில்லை