உள்நாடு

கட்டுப்பணத் தொகை ரூ.3 மில்லியன் வரை அதிகரிக்க யோசனை

(UTV | கொழும்பு) – தேர்தலில் போட்டியிடும் போது செலுத்தவேண்டிய கட்டுப்பணத் தொகையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம்  ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் செலுத்தவேண்டிய கட்டுப்பணத் தொகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தேர்தலில் களமிறங்கும் சுயாதீன வேட்பாளர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட கட்டுப்பணத் தொகை, கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கும் வேட்பாளர்களுக்கும் செல்லுபடியாகும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என குறித்த அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் சுயாதீன உறுப்பினர் ஒருவர் 75,000 ரூபா கட்டுப்பணம் செலுத்தும் நடைமுறையே தற்போது அமுலிலுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாபதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரால் 50,000 ரூபா கட்டுப்பணமாக செலுத்தப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த கட்டுப்பணத் தொகையை 3 மில்லியன் ரூபாவாக அதிகரிக்குமாறு அமைச்சரவைப் பத்திரத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

பசில் ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்

முஸ்லிம் தனியார் சட்டத்தில் விரைவில் சுமுகமான தீர்வு – நீதி அமைச்சர் விஜேயதாச

இம்முறை 75ஆவது சுதந்திர தினம் குறைந்த செலவில்