உள்நாடு

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 9 மாவட்டங்களைச் சேர்ந்த 29 கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் இடங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறை பிரிவில் சாவற்காடு, யாழ்ப்பாணம் காவல்துறைப் பிரிவின் ரெக்லமேசன் மேற்கு, குருநகர் மேற்கு, ஊர்காவற்துறை காவல்துறைப் பிரிவில் காரைநகர் – கள்ளித்தெரு பகுதி மற்றும் காரைநகர் கள்வந்தாழ்வு பகுதி என்பன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன.

கம்பஹாவில் கல்பொரளை – 100 தோட்டமும், பதுளையில் ஹுலன்காபொலவும் விடுவிக்கப்பட்டன.

நுவரெலியா மாவட்டத்தில் கினிகத்தேனை காவல்துறைப் பிரிவில் உள்ள கெரொலினா தோட்டம் கடவல பிரிவு, கொத்மலை காவற்துறைப் பிரிவின் பெரமன தெற்கு என்பன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன.

மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறைப் பிரிவில் புதிய காத்தான்குடி வடக்கு மற்றும் தெற்கு, கர்பலா வீதி, ஏ.எல்.எஸ் மாவத்தை, நூர்னியா மயானவீதி மற்றும் கடற்கரை வீதி என்பனவும், வாழைச்சேனை காவல்துறைப் பிரிவில் பிரைன்துறைச்சேனை முதலாம் மற்றும் இரண்டாம் குறுக்கு வீதிகள் என்பன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

களுத்துறை – தொடாங்கொட காவல்துறைப் பிரிவில் எலதுவ வத்தையும், இரத்தினபுரி மாவட்டத்தின் முல்லேகந்த தோட்டம், கொடவல கிராம சேவகர் பிரிவு, நோராகல தோட்டம் மேல்பிரிவு, பல்மடுல்ல தோட்டம், போபாத்த வசம என்பன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன.

அத்துடன் இத்திரனபுரி எஹெலியகொட காவல்துறைப் பிரிவில் உள்ள பெம்பேகம தோட்டம், நிவித்திகலை காவல்துறைப் பிரிவில் நோராகல, யக்தெஹிவத்த, பத்தகட ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் விடுவிக்கப்பட்டன.

கேகாலையில் நியதுருபொல 1, 2, 3 மற்றும் 4ம் தோட்டங்களும், தெவலகந்த தோட்டமும் விடுவிக்கப்பட்டதுடன், மொனராகலை மாவட்டத்தின் கனுல்வெல கிராம சேவகர் பிரிவும் விடுவிக்கப்பட்டது.

Related posts

தேர்தல் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்களை மீறும் ஊடக நிறுவனங்களுக்குத் தேர்தல் முடிவுகளை வழங்க மாட்டோம்

editor

இன்று முதல் நடைமுறையாகும் இலக்க முறை

3 பாடங்களில் ‘ஏ’ சித்தி பெற்ற மாணவிக்கு நேர்ந்த அவலம்!