உலகம்

ஈராக் மருத்துவமனையில் தீ விபத்தில் 60 பேர் பலி

(UTV |  ஈராக்) – ஈராக்கில் நசிரியா (Nasiriya) எனும் நகரில் உள்ள மருத்துவமனையில் கொரோனா நோயாளர்கள் இருந்த வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 60-இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு 67 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

ஈராக்கின் தெற்கு நகரான நசிரியாவில் உள்ள அல் ஹுஸைன் மருத்துவமனையில் இடம்பெற்ற தீ விபத்தில், அங்கு கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நோயாளிகள் பலர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒக்சிஜன் தாங்கி வெடித்துச் சிதறியதில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மருத்துவமனைக் கட்டடத்திலிருந்து மீட்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் பாக்தாத்தில் உள்ள மருத்துவமனையில் ஒக்சிஜன் தாங்கி வெடித்துச் சிதறியதில் ஏற்பட்ட தீ விபத்தில் 82 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு சுகாதாரத் துறை பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடாவின் முக்கிய நகரை விட்டு பலர் வெளியேற- காரணம் என்ன?

தாலிபான்கள் முன்னிலையில் உலக நாடுகள் தோல்வி

ஒட்சிசன் பற்றாக்குறை : நள்ளிரவில் அடுத்தடுத்து உயிர்கள் பலி