உள்நாடு

தனிமைப்படுத்தல் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் – GMOA எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கட்டுப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் குறித்த சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வைத்தியர் செனால் பெர்னாண்டோ மேலும் தெரிவிக்கையில்;

“நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை ஒழுங்காகப் பயன்படுத்தும் அதிகாரத்தையே பொலிஸ் உட்பட ஏனைய நிறுவனங்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் மூலம் வழங்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கட்டுப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒவ்வொரு அரசியல் தரப்புக்கும் தனிநபர்களுக்கும் விரும்பிய விதத்தில் சட்டத்தைப் பயன்படுத்த முடியாது. தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பொலிஸார் துஷ்பிரயோகம் செய்வதென்றால், நாட்டினுள் ‘ஒரே சட்டம்’ என்ற கோட்பாட்டை பின்பற்ற முடியாது போகும். குறித்த சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், சுகாதார சேவைகள் பணிப்பாளரைக் கேட்டுக்கொண்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

தங்கம் மற்றும் டொலரின் இன்றைய நிலவரம் இன்றைய நிலவரம்

பாகிஸ்தான்- இலங்கை உறவு மற்றும் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை வருகை – ஒரு கண்ணோட்டம்

சர்வதேச கடற்படை வீரர்கள் 47 பேர் இலங்கைக்கு