உள்நாடு

வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் கொவிட் தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டம்

(UTV | கொழும்பு) –  நாட்டில் இதுவரை 4,178,737 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கையின் பிரகாரம்;

நேற்றைய தினத்தில் (12) மாத்திரம் 173,988 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 40,276 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 385,849 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் 13,357 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போட்டப்பட்ட நிலையில் இதுவரை 138,801 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் 14,464 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அதேபோல், நேற்றைய தினம் நாட்டில் 4725 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 23073 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஞ்சன் தொடர்பில் CID பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் உத்தரவு

போக்குவரத்து ஒழுங்கை விதிகள் மீளவும் இன்று முதல் அமுலுக்கு

கொரோனா வைரஸ் – விஞ்ஞான ரீதியான முறைமையினை பின்பற்றுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்