உள்நாடு

மொடர்னா தடுப்பூசிகள் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) –  அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 10 இலட்சம் டோஸ் மொடர்னா தடுப்பூசிகள் எதிர்வரும் 15 ஆம் திகதி இலங்கைக்கு கிடைக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த தடுப்பூசிகளை கண்டி மாவட்ட மக்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

இதற்கிடையில், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி, எதிர்வரும் நாட்களில் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

மீதமுள்ள 600,000 தடுப்பூசிகளை கொழும்பு பகுதியில் உள்ள மக்களுக்கு விநியோகித்த பின்னர் கேகாலை பகுதி மக்களுக்கு வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, வரவிருக்கும் ஃபைசர் தடுப்பூசி வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

Related posts

இலங்கையில் மனிதாபிமானம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது [VIDEO]

அடுத்த சில நாட்கள்தான் உண்மையான சோதனையாக இருக்கும்

பலஸ்தீன மக்கள் சார்பாக அதிகமான போராட்டங்களை ஏற்பாடு செய்த ஒரேயொரு அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி கட்சியே : பொத்துவில் தொகுதி அமைப்பாளர் புகாரி