உலகம்

லாஹூரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியா அதன் தொடர்ப்பை மறுப்பது ஏற்கமுடியாது

(UTV |  லாகூர்) – லாகூரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியா அதன் தொடர்ப்பை மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம் என பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகஊடகப் பேச்சாளர் சஹீத் ஹபீஸ் ஷௌத்ரீ அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையானது;

ஜூன் 23 ம் திகதி அன்று லாஹூரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியா அதன் தொடர்ப்பை மறுப்பது ஏற்கமுடியாத ஒரு விடயம்

2021 , ஜூன் 23ம் திகதி அன்று லாகூரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியா அதன் தொடர்ப்பை மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகும். இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு இந்தியாவின் அனுசரணை மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டமைக்கான மறுக்கமுடியாத சான்றுகள் உள்ளன.

பாகிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு இந்திய அரசு நிதியுதவி செய்வதையும் கடந்த காலங்களில் நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.

பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களைத் திட்டமிட்டு செயல்படுத்துவதில் எல்லையைத் தாண்டிய புலனாய்வு அமைப்பு ஈடுபட்டிருந்தது என்பதில் சந்தேகமில்லை.

2016 மார்ச் மாதத்தில் கையும் மெய்யுமாக பிடிபட்ட தளபதி குல்பூஷன் ஜாதவ், இந்திய அரச நிதியுதவியினால் மேற்கொள்ளப்படும் பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாதத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாகவும்.

இந்தியாவின் அரசுக் கொள்கையின் ஒரு கருவியாக பயங்கரவாதத்தைப் பயன்படுத்துவது என்பது சர்வதேச சட்டம், ஐ.நா. பொருளாதாரத் தடைகள் மற்றும் சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு மரபுகளின் கீழ் குற்றமான ஒருசெயலாகும்.

பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாதத்தை கட்டவிழ்க்கும் இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பது உலக சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானின் நற்சான்றிதழ்களுக்கு இந்தியாவின் ஒப்புதல் தேவையில்லை. பாகிஸ்தானானது அல்கொய்தா அமைப்பு, மற்றும் அதன் துணை அமைப்புக்களின் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாடாகும்.

பாகிஸ்தானின் தியாகங்களும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் அதன் சாதனைகளும் உலகறிந்த விடயமே.

பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாத திட்டங்களை நீக்கவும் , லாகூர் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யவும், தாமதமின்றி அவர்களை நீதிக்கு கொண்டு வரவும் இந்தியாவை நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்.

இஸ்லாமாபாத்

08 ஜூலை 2021

 

Related posts

கொரோனா வைரஸ் – உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை

ஹெலி விபத்தில் 5 பொலிசார் உயிரிழப்பு

முஷாரஃபுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சட்டவிரோதமானது