உள்நாடு

ஜனாதிபதி ஊடாக மக்களுக்கு விரைவில் நிவாரணம்

(UTV | கொழும்பு) – நாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டு நிவாரணங்களை விரைவாக வழங்க ஜனாதிபதி ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று(08) பெல்லன்வில விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்டபோதே அவர் தெரிவித்திருந்தார்.

நாட்டின் முழு பொருளாதாரத்தையும் கருத்திற் கொண்டு ஜனாதிபதி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார். நாட்டை பொருளாதார ரீதியில் மீள கட்டியெழுப்ப கடினமாக பாடுப்பட வேண்டியுள்ளது. அதன் பிரதிபலன் விரைவில் கிடைக்க பெறும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

இலங்கைக்கு 400 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிகளை வழங்க சீனா தீர்மானம்

editor

ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்காது!

செவ்வாயன்று கோட்டா – மைத்திரி இடையே சந்திப்பு