உள்நாடு

அனைத்து விசாக்களினதும் செல்லுபடி காலம் நீடிப்பு

(UTV | கொழும்பு) – தற்போது நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் அனைத்து விசாக்களினதும் செல்லுபடி காலம் மேலும் ஒரு மாதக்காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் இன்று(09) முதல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை இது அமுலில் இருக்கும் என குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசா காலம் நிறைவடைந்தவர்களுக்கு அந்த காலப்பகுதிக்கான விசா கட்டணம் அறவிடப்படுமே தவிர எந்தவித அபராதமும் விதிக்கப்பட மாட்டாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

செரண்டிப் நிறுவனமும் கோதுமை மாவின் விலையை அதிகரித்தது

நுகேகொடை சந்தியை அண்மித்த வீதிகளில் கடும் வாகன நெரிசல்

புதிய மக்கள் முன்னணி இன்று கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் காரியாலயத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.