கேளிக்கை

திலீப் குமார் மரணம்

(UTV | இந்தியா) – புகழ்பெற்ற ஹிந்தி திரைப்பட நடிகர் திலீப் குமார் உடல்நலக்குறைவால் மும்பையில் இன்று (07) காலமானார். அவருக்கு வயது 98.

கடந்த ஜூன் 29-ம் திகதி சுவாசக் கோளாறு காரணமாக நடிகா் திலீப் குமாா் (98) மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இதனிடயே மருத்துவமனையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி நடிகர் திலீப்குமார் உயிர் இன்று பிரிந்தது.

திலீப் குமாருக்கு மோடி, ராகுல் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் முகமது யூசூப் கான் என்ற இயற்பெயர் கொண்ட நடிகர் திலீப்குமார் பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் 1922-ம் ஆண்டு பிறந்தவர். 1944-ம் ஆண்டு ஸ்வார் படா என்ற படம் மூலம் அறிமுகமான இவர் 65-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தேவதாஸ், கங்கா யமுனா, ஆன், தஸ்தான் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களாகும்.

திரையுலகில் சிறப்பான பங்காற்றியமைக்காக தாதா சாகேப் பால்கே விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

Related posts

சன்னி லியோன் ஆச்சர்யத்தில் வெளியிட்ட வீடியோ உள்ளே…

பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரபல பின்னணிப் பாடகர் உதித் நாராயணனின் மகன்

கொரோனாவும் பிரபலங்களும் – நிழலாக உலா வரும் ஊடகங்கள்