உள்நாடு

மேலும் 50,000 SputnikV தடுப்பூசிகள் நாட்டுக்கு

(UTV | கொழும்பு) –  ரஷ்யாவின் 50,000 Sputnik V தடுப்பூசிகள் இன்று (07) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளன.

இதேவேளை, அமெரிக்காவின் Pfizer தடுப்பூசி இன்று முதல் நாட்டு மக்களுக்கு ஏற்றப்படவுள்ளது.

கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதிகளில் வசிக்கும் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு Pfizer தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.

AstraZeneca முதலாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியாக Pfizer தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது,

இதற்கமைய, இன்று (07) முதல் வௌ்ளவத்தை – ரொக்ஸி கார்ட்ன், மாளிகாவத்தை – பி.டி.சிறிசேன விளையாட்டரங்கு மற்றும் நாரஹேன்பிட்ட இராணுவ வைத்தியசாலைகளில் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.

தடுப்பூசி ஏற்றப்படும் தினம் மற்றும் இடம் என்பன குறுஞ்செய்தியூடாக அறிவிக்கப்படும் எனவும் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் முதலாவதாக AstraZeneca தடுப்பூசி பெற்றுக் கொண்ட 80,000 பேருக்கு இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை நிராகரிப்பு

ஆவணங்களை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவு

இன்று மாலை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே சந்திப்பு