உள்நாடு

எஸ்ட்ரா செனகா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு நேற்றைய தினம் கிடைக்கப்பெற்ற 26,000 ஃபைஸர் தடுப்பூசி டோஸ்கள் எஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் முதலாவது டோஸினை பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸாக ஏற்றப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

55 வயதுக்கும் ​மேற்பட்டவர்களுக்காக இந்த தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

அதன்படி, கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரை எஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் முதல் டோஸினை பெற்றுக் கொண்டவர்களுக்கு நாளை(07) முதல் செலுத்தப்படவுள்ளது.

திகதி, இடம் மற்றும் நேரம் குறுந்தகவல் மூலம் அறிவிக்கப்படும் என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

ஐ.தே.க. மேலும் 37 பேரின் உறுப்புரிமை நீக்கம்

இராணுவத்தினரை தனிமைப்படுத்த பாடசாலைகளை பயன்படுத்தவில்லை

களியாட்ட விடுதியில் ஒருவர் பலி