உள்நாடு

ரிஷாத் பதியுதீன் மனுவில் இருந்து நான்காவது நீதியரசரும் விலகல்

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு விசாரணையில் இருந்து மற்றொரு உயர் நீதிமன்ற நீதியரசர் விலகியுள்ளார்.

குறித்த மனு இன்று(05) உயர் நீதிமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது
நீதியரசர் மஹிந்த சமயவர்தன தனது தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்திருந்தார்.

இதற்கு முன்னர் நீதியரசர்களான யசந்த கோதாகொட, ஜனக டி சில்வா மற்றும் ஏ.எச்.எம்.டி நவாஸ் ஆகியோர் குறித்த மனுவில் இருந்து விலகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவிப்பு !

தற்போதைய நெருக்கடி 1974ம் ஆண்டு காரணமல்ல – பொன்சேகா

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்!