(UTV | கொழும்பு) – பொதுமக்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டாலும், சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்றவேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நோயாளர்கள் குறைவாக பதிவாகுவதால், ஆபத்து இல்லை என்ற அடிப்படையில் செயற்பட முடியாது.
தொடர்ந்தும் 1,500 முதல் 2,000 வரையில் நோயாளர்கள் பதிவாகின்ற நிலையில், டெல்டா திரிபு தொற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் வேறு திரிபுகள் ஏற்படலாம்.
எனவே, சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்ற வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.