உலகம்

டிக் டாக் செயலியின் தடை நீக்கம்

(UTV |  இஸ்லாமாபாத்) – சீனாவில் பிரபலமான டிக் டாக் செயலிக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன.

பிரபல வீடியோ செயலியான டிக் டாக் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தியாவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், பல்வேறு நாடுகளில் டிக் டாக் இன்னமும் மிகப் பிரபலமான செயலிகளில் ஒன்றாக உள்ளது.

பாகிஸ்தானிலும் டிக் டாக் செயலி லட்சக்கணக்கானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தானில் உள்ள பழமைவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

டிக் டாக் செயலியில் ஆபாசமான பதிவுகள் உள்ளதாகவும், எல்ஜிபிடி (LGBTQ) சமூகத்தினரை ஊக்குவிக்கும் வகையில் டிக் டாக் பதிவுகள் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இதற்கிடையே, சீனாவுக்குச் சொந்தமான டிக் டாக் செயலிக்கு எதிராக சிந்து நீதிமன்றத்தில் தனிநபர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் டிக் டாக் செயலியை தடை செய்ய உத்தரவு வந்ததால், பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிக் டாக்கை தடை செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சிந்து மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது. அதேவேளையில், ஆட்சேபத்துக்குரிய பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவையடுத்து பாகிஸ்தானில் மீண்டும் டிக் டாக் செயலி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

Related posts

குரங்கு காய்ச்சல் வைரஸ் பரவல் குறைவு

பணயக் கைதிகளின் விபரங்களை பகிருமாறு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஷங்காய் டிஸ்னிலேண்ட் பூங்கா மீண்டும் திறப்பு