உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 563 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 563 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதற்கமைய, இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 46,823 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், நேற்று (02) மாத்தளை மாவட்டத்தில் 66 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 49 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 47 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாட்டை மீறி மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவதற்கு முயற்சித்த 564 பேரும் திருப்பி அனுப்பப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Related posts

 Dr ஷாபி சிஹாப்தீன் மீண்டும் கடமையில்

கொரோனாவிலிருந்து இதுவரை 2,121 பேர் குணமடைந்தனர்

மலையக மக்கள் விடயத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – பழனி திகாம்பரம்.