(UTV | கொழும்பு) – மின்னேரியா தேசிய பூங்காவில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரியை ஹபரண பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இராணுவ அதிகாரி ஹபரண பொலிஸ் நிலையத்தில் இன்று (01) காலை சரணடைந்துள்ளதாகவும், கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கடந்த 23 ஆம் திகதி வனவிலங்கு அதிகாரிகளின் கடமைக்கு குறித்த இராணுவ அதிகாரி இடையூறு விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதனை அடுத்து இரு தரப்பிலும் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.