உள்நாடு

இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள்

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தல் தொடர்பான அறிவிப்பு மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 4 மாவட்டங்களைச் சேர்ந்த 6 பகுதிகள் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொனராகலை மாவட்டத்தின் பிபில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனுல்வெல பகுதி இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கேகாலை மாவட்டத்தின் வரகாபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்லவ கிராமசேவகர் பிரிவின் நியதுருபொல இலக்கம் 1, 2, 3 மற்றும் 4 ஆகிய தோட்ட வீடுகள் பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்னகம கிராமசேவகர் பிரிவின் தேவாலகந்த தோட்டப் பகுதி மற்றும் கொடம்பல கிராம சேவகர் பிரிவின் பபேகம தோட்டப் பகுதி ஆகியன தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலதூவ கிராம சேவகர் பிரிவின் எலதூவ தோட்டப் பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் காலி மாவட்டத்தின் எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழைய கொலனி கிராம சேவகர் பிரிவின் திவிதுரு தோட்டம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை 4 மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம் : CCD இற்கு பிறப்பித்துள்ள உத்தரவு

பாத்திமா முனவ்வராவுடைய ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது

நாட்டின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு