உள்நாடு

அதிக விலைக்கு அரிசி விற்கும் வர்த்தகர்களுக்கு ரூ.100,000 அபராதம்

(UTV | கொழும்பு) –  கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்கும் வர்த்தகர்களுக்கு 100,000 ரூபா அபராதம் விதிக்க நேற்று(28) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது 2,500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையிலேயே இந்த புதிய அபராத தொகை தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் அரிசி விலை தொடர்ந்து அதிகரிப்பதைக் கருத்திற் கொண்டு விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக அபராதத்தை அதிகரிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கல்முனை கல்வி வலயம் காஸா மக்களுக்காக 31 இலட்சத்து 28 ஆயிரத்து ஐநூறு ரூபா உதவுத் தொகை கையளிப்பு

MT New Diamond கப்பலின் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள்

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்னவுக்கு பதவி உயர்வு