உள்நாடு

இன்றும் பல கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் சில மாவட்டங்களுக்குட்பட்ட பல கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்குவரும் வகையில் இன்று(29) அதிகாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கொழும்பு, கம்பஹா, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் காலி மாவட்டங்களுக்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டம் : கொலன்னாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிங்கபுர கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த கங்ஹிந்தசெவன தொடர்மாடி குடியிருப்பை தவிர்ந்த ஏனைய பகுதிகளும், கம்பஹா மாவட்டத்தின் களனி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பொரல்ல 100 ஆம் தோட்ட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

காலி இந்துருவ கோனகல கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பொல்தொடுவ கிராமம், அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய வளத்தப்பிட்டி கிராமம், மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை கிழக்கு, மேற்கு மற்றும் மாஞ்சோலை பதுரியா ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

 

Related posts

கருணா தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு CID இற்கு உத்தரவு

உலகின் மிக வேகமாக பரவும் கொவிட் மாறுபாடு இலங்கையிலும்

கப்பல் பயணிகளுக்கு இலங்கையினுள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு