உள்நாடு

இன்று முதல் நடைமுறையில் உள்ள போக்குவரத்து வசதி

(UTV | கொழும்பு) –  இன்று முதல் 70 ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளுக்கு செல்பவர்களுக்காக, இந்த ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

இந்நிலையில், சுமார் 35 தொடருந்துகள், காலையும் மாலையும் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேநேரம், இன்றைய தினம் மாவட்டங்களுக்குள் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்களுக்காக, தேவைக்கேற்றவாறு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தை விடவும் அதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மேலும் 462 பேருக்கு கொரோனா தொற்று

ரணில் விக்கிரமசிங்க CID இல் வாக்குமூலம்

BREAKING NEWS = பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம் !