உலகம்

பிரித்தானிய சுகாதார அமைச்சர் இராஜினாமா

(UTV |  பிரித்தானியா) – பிரித்தானியாவின் சுகாதார அமைச்சர் மெட் ஹென்கொக் (Matt Hancock) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கொவிட்-19 பரவல் காரணமாக சமூக இடைவெளி குறித்த அறிவுறுத்தல் உலக நாடுகள் அனைத்திலும் பேணப்படுகின்றன.

எனினும் அந்த அறிவுறுத்தலை மீறி சக பெண் பணியாளர் ஒருவருக்கு அவர் முத்தமிடும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

இதனையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என்ற அழுத்தம் வலுப்பெற்றன.

இந்நிலையில் தாம் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்ட விடயத்தை நிறைவேற்றத் தவறியதன் காரணமாக சுகாதார செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக, பிரதமர் பொரிஸ் ஜொன்சனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவரது பதவி விலகலுக்கு பொரிஸ் ஜொன்சன் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரித்தானியாவின் புதிய சுகாதார அமைச்சராக முன்னாள் நிதி அமைச்சர் சஜிட் ஜாவிட் (Sajid Javid) நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

கொரோனா வைரஸ் – இதுவரை 636 பேர் பலி

இந்தனோசியா நிலநடுக்கத்தில் 162 பேர் பலி!

உலக சுகாதார அமைப்பிலிருந்து விலக நேரிடும் – பிரேசில் எச்சரிக்கை